Homeசெய்திகள்தமிழ்நாடுசெவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை

செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை

-

செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

annamalai

பால் கொள்முதல் விலையை 7 முதல் 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்திருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட அரசுடனான பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்த சூழலில் இன்று அறிவித்தபடி பால் உற்பத்தியாளர்கள் பால் ஏற்றுமதியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு, ‘பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?

பால் உற்பத்தியாளர்கள், ‘ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்’ என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என,
பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ