சென்னை எண்ணூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை ரயில்வே போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்த பொழுது எண்ணூர் பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து எண்ணூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பேரில் சிறுவன் உட்பட இருவரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை செய்த பொழுது எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் திறந்து கிடந்த பொழுது வீட்டுக்குள் புகுந்து ஏழு கிராம் தங்கம், 30கிராம் வெள்ளி நகை திருடியது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து எண்ணூர் காமராஜர் நகர் தெருவை சேர்ந்த சூர்யா என்கின்ற மிட்டாய் சூர்யா மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திமுகவை தவறாக சித்தரித்து திருமாவுக்கு அழுத்தம் தருகின்றனர்… மதிமாறன் பகீர் குற்றச்சாட்டு!