Homeசெய்திகள்கட்டுரைகொழுப்புக்கட்டியை  சரி செய்ய முடியுமா!

கொழுப்புக்கட்டியை  சரி செய்ய முடியுமா!

-

கொழுப்புக்கட்டியை  சரி செய்ய முடியுமா!

கொழுப்புகட்டியை சரி செய்ய முடியுமா? அறுவை சிகிச்சை தேவையா? வருங்காலத்தில் அவை புற்று நோயாக மாறுமா?

என்று நம் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்கிறார். சென்னை GEM மருத்தவமனையை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப.செந்தில்நாதன்.

கொழுப்பு கட்டி வருவதற்க்கான மிக முக்கிய காரணம். நம் ஜீனில் யாராவது ஒருவருக்கு இருந்தால் கூட கொழுப்பு கட்டிகள் வரும், கொழுப்பு நிறைந்த உணவு பொருள் அதிகம் சாப்பிட்டால் கூட கொழுப்பு கட்டிகள் வளரும். இதை lipoma என்றும் சொல்லுவார்கள்.

இந்த வகையான கட்டிகள் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் காணப்படும். சருமத்திற்கு அடியில் சிறிய கட்டிப்போல தோன்றும், அதை தொட்டு பார்த்தால் மிக மென்மையாக தெரியும்.

கொழுப்புகட்டி சிலருக்கு, உடலில் ஒரு சில இடங்களில் காணப்படும். இன்னும் சிலருக்கு உடல் முழுவதும் காணப்படும், இவற்றை சரி செய்யவது சுலபமான ஒன்றாகிவிட்டது.

கொழுப்புகட்டி தான் என்று நீங்கள் உருதி செய்து விட்டால், அருகில் உள்ள மருத்துவரை அணுகி தெரிய படுத்தவும் அறுவை சிகிச்சை மூலம் அதன் வேர் முழுதும் கொழுப்பு கட்டியை அகற்ற முடியும்.

உடல் முழுதும் கொழுப்புகட்டி உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது கடினம், அவர்களுக்கு கொழுப்பற்ற உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிக்கன், மட்டன், வருத்த மீன், முட்டை, பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

வாரத்தில் இருமுறை வேப்பிலையை அரைத்து, அரை டம்பளர் அளவு அதாவது, 20ml வரை குடிக்கவும், பாகற்காய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு கட்டி வற்றி, அதன் வேரும் உதிருந்து விடும்.

இந்த வகையான கொழுப்பு கட்டிகள், வருங்காலத்தில் புற்றுநோய் கட்டியாக மாறிவிடுமோ, என்று அச்சம் கொள்ள வேண்டும்.

தற்போதைய காலக்கட்டத்தில் இதை சரி செய்வது மிக மிக சுலபம்.

MUST READ