காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 18 மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.
இந்த நிலையில் மீனவர்களின் சிறை காவல் தேதி முடிந்து இன்று பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் விசாரணை நடத்திய நீதிபதி 18 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனை அடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்…. பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!