Homeசெய்திகள்சென்னைஅம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்...!

அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்…!

-

அம்பத்தூரில் பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்மாற்றி உரசி 50 சதவிகித தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த தம்பதி செந்தில்குமரன் (40) மற்றும் சத்யா (37). லாரி ஓட்டுனரான செந்தில்குமரனின் மகன் ஸ்வாதிஸ்வரன் (12) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் இருபதாம் தேதி வீட்டின் அருகே இருந்த பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

பூங்காவின் சுற்று சுவற்றில் அமர்ந்து விளையாடிய போது அருகே இருந்த மின்மாற்றியில் ஸ்வாதீஸ்வரன் கை எதிர் பாராத விதமாக உரசியதில் எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் துடிதுடித்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அம்பத்தூரில் டிரான்ஸ்பார்மரால் சிறுவன் வாழ்க்கையே தலைகீழாக மாறியது: பரபரப்பு சம்பவம்...!கை முகம் தோள்பட்டை மார்பு வயிறு என உடலின் பெரும் பகுதிகளில் 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இரண்டு மாதமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு தொடை பகுதியில் இருந்து தசைகளை எடுத்து வயிறு, மார்பு பகுதியில் வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பின் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சிறுவன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் அவரது மற்றொரு தொடை பகுதியில் உள்ள தசையை எடுத்து தலை மற்றும் முகத்திற்கு வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் நெருக்கடியில் உள்ள ஓட்டுநர் செந்தில்குமரன் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மகனுக்கு ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தால் மீள முடியாத துயரத்திலும், வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத பொருளாதார நிலையிலும் சிறுவனின் குடும்பத்தினர் பரிதாப நிலையில் உள்ளனர்.

எனவே தங்களது மகனின் உயிரை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என செந்தில் குமரனும் அவரது மனைவி சத்யாவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அபாயகரமாக அமைந்துள்ள மின்மாற்றியை உடனே மாற்றி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை

MUST READ