கடவுளே அஜித்தே என்பது குறித்து அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் தல, அல்டிமேட் ஸ்டார் என பல அடைமொழிகளில் நடிகர் அஜித்தை குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் கடவுளே அஜித்தே என்றும் கோஷமிட்டு வருகின்றனர். நடிகர் அஜித்திற்கு தன்னை தல என்று சொல்வதே பிடிக்காத நிலையில் பலரும் அவரை கடவுளே அஜித்தே என்று சொல்வதை மற்றும் அவர் எப்படி ஏற்றுக் கொள்வார். எனவே தான் அவர் திடீரென நேற்று (டிசம்பர் 10) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு கடவுளே அஜித்தே என்ற கோஷம் தன்னை கவலை அடைய செய்வதாகவும் இனி அப்படி தன்னை அழைக்க வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது பெயரில் மட்டுமே தான் அழைக்கப்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில், “சமீபத்தில் நடந்த சில பள்ளி நிகழ்ச்சிகளில் மேடையில் விருந்தினர்கள் பேசும் போது இப்படியான கோஷங்களை மாணவர்கள் எழுப்பியது அதிர்ச்சியளித்தது.
சமீபத்தில் நடந்த சில பள்ளி நிகழ்ச்சிகளில் மேடையில் விருந்தினர்கள் பேசும்போது.. இப்படியான கோஷங்களை மாணவர்கள் எழுப்பியது அதிர்ச்சியை அளித்தது.
ஏழு கழுதை வயதான நபர்களும் இப்படி கோஷம்போடுவது கேவலம்.
அஜித் தற்போது கூறியிருப்பது… இதற்கு மட்டுமல்ல. எப்போதும் இப்படியான கிறுக்கு… pic.twitter.com/Cj9D2f1FoI
— Blue Sattai Maran (@tamiltalkies) December 10, 2024
ஏழு கழுதை வயதான நபர்களும் இப்படி கோஷமிடுவது கேவலம். நடிகர் அஜித் தற்போது கூறி இருப்பது, இதற்காக மட்டுமல்ல எப்போதும் இப்படியான கிறுக்கு வேலைகளை யாரும் செய்ய வேண்டாம் என்பதே. நடிப்பது மட்டுமே தனது வேலை. ரசிகர்களின் பணம், நேரம், உழைப்பை சுரண்டி பிழைப்பது அல்ல என்பதை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார் அஜித். அதுபோல படம் பார்ப்பதோடு நிறுத்திவிட்டு படிப்பு மற்றும் மற்ற வேலைகளை பார்க்கவும். இனி இப்படியான வெட்டி கோஷங்களுக்கு அவருடைய பெயரை பயன்படுத்த வேண்டாம். அதை மீறி யாரேனும் செய்தால் அதைப் பிடித்து தொங்கி வைரலாக்க வேண்டாம். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அவமானம் தமிழகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் தான்” என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.