Homeசெய்திகள்சென்னை”பழனிசாமியை கைது செய்க” உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

”பழனிசாமியை கைது செய்க” உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

-

- Advertisement -

”பழனிசாமியை கைது செய்க” உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை

எடப்பாடியை தூக்கி உள்ளே வைக்க வேண்டும், கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முறையிட்டனர்.

ops

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இரங்கல்களை தெரிவித்தார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவையடுத்து முதலமைச்சர், அமைச்சர் சேகர் பாபு உடன் நானும் எங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளோம். மறைவுக்கு வருந்துகிறோம்” எனக் கூறினார்.

os

முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் இருந்து முதலமைச்சர் புறப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் கோரஸாக, மிகப்பெரிய சுனாமி எடப்பாடி, அவரை கைது செய்யுங்கள் என முழக்கமிட்டனர். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்து கொண்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், “கொடநாடு கொலை வழக்கில் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும், அம்மா கொலை வழக்கில் எப்படி செய்தீர்களோ, அதே போல விரைந்து விசாரித்து எடப்பாடியை உள்ளே தூக்கி போட வேண்டும். எங்களை எல்லாம் பிரித்து கட்சியை உடைத்து வேடிக்கை பார்க்கிறார். கட்சியை அழிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எங்களுக்கு ஆட்சி கூட முக்கியமில்லை, கட்சி தான் முக்கியம்” ” என முறையிட்டனர்.

MUST READ