Homeசெய்திகள்தமிழ்நாடுபைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவு

-

இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவு.

பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் : போக்குவரத்து துறை உத்தரவுதமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கார், ஆட்டோவை  இதனை தொடர்ந்து பைக் டாக்ஸி சேவையின் பயன்பாடு முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது.

குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோர், விரைந்து ஒரு இடத்தை அடைய நினைப்போரின் முதல் விருப்பமாக பைக் டாக்ஸிகள் உள்ளன. காரணம் குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாய்ப்புகள் குறைவு. இதனால் பொதுமக்கள் பைக் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன.

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனாலும், இத்தனை நாள் இது கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ