கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.புஷ்பா பார்ட் 1 படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வெளியாகி உள்ள புஷ்பா 2 திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. நாளுக்கு நாள் வெளியாகும் இப்படத்தின் வசூல் விபரங்கள் இந்திய சினிமாவை வாயை பிளக்க வைத்துள்ளது. ஒரு சில இந்திய சினிமாக்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளன. தற்போது அந்த வரிசையில் புஷ்பா 2 இணைந்துள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே அசால்டாக மாற்றி அமைக்கும் அளவுக்கு பண பலம் படைத்தவனாக அவதாரம் எடுக்கிறார். அதாவது கமர்சியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் பொருத்தி, வழக்கமான தெலுங்கு படங்களில் வரும் மசாலா சண்டை காட்சிகளையும் திகட்டாத அளவுக்கு கொடுத்து இப்படத்தின் வெற்றியை பறைசாற்றியுள்ளனர் படக்குழுவினர். விமர்சன ரீதியாக இப்படம் ஒரு தரப்பினரை கவரவில்லை என்றாலும் வெகுஜன ரசிகர்களை சென்றடைந்து மாபெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்திய பகுதிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இத்தனை அம்சங்களும் ஒரு சேர பொருத்தி புஷ்பா 2 படத்தை வசூலில் சிகரத்தை அடையச் செய்துள்ளனர்.
1002 CRORES 🔥
RULING BOX OFFICE RECORDS 💥💥💥#PUSHPA2HitsFastest1000Cr#Pushpa2 #Pushpa2TheRule#WildFirePushpa pic.twitter.com/zNuSkqi8pR
— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
வெளியான 6 நாட்களில் இப்படம் 1002 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்திய சினிமாவில் எந்த ஒரு படமும் வெறும் 6 நாட்களில் ஆயிரம் கோடியை கடந்ததில்லை. ஆனால் அந்த அசாத்திய சாதனையை புஷ்பா 2 – தி ரூல் திரைப்படம் படைத்துள்ளது. விடுமுறை நாட்கள் மட்டும் இன்றி வார நாட்களிலும் வசூலில் மிரட்டி வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்கு வரை வேற பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத சூழல் இருப்பதாலும் புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் இனி வரும் நாட்களிலும் இப்படம் மிகப்பெரிய வசூலை பெரும் என்று உறுதியாக கூறலாம். இறுதியாக இப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல் பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.