சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பி
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
மேலும், திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.