கடந்த நவம்பர் மாதம் நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதாவது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் காதலுக்கு அடித்தளமாக இருந்தால் நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டதாகவும் அவர் இரண்டு வருடங்களாக தனக்கு அனுமதி தரவில்லை எனவும், 3 வினாடி காட்சிகளை டிரைலரில் பயன்படுத்தியதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனுஷ் மீது குற்றம் சாட்டியிருந்தார் நயன்தாரா. இதன் தொடர்ந்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா பியான்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திருமண ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. விக்னேஷ் சிவன் நானும் ரெளடி தான் படப்பிடிப்பின் போது தனது செல்போனில் படம் பிடித்த காட்சிகளை தங்களின் ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார். இந்நிலையில் தான் தன்னுடைய அனுமதி இல்லாமல் காட்சிகளை பயன்படுத்தி இருந்ததால் நடிகர் தனுஷ் , 10 கோடி நஷ்ட ஈடு கேட்டும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க கோரியும் நயன்தாரா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (டிசம்பர் 12) விசாரணை வந்த நிலையில் வழக்கு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வருகின்ற ஜனவரி 8ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைக்கால தடைக் கோரிய மனு மீது ஜனவரி 8ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.