Homeசெய்திகள்அரசியல்பாஜக , காங்கிரஸ் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பு

பாஜக , காங்கிரஸ் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பு

-

பாஜக , காங்கிரஸ் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்புநாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து எம்.பி-களும் அவைக்கு வர வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 20ம் தேதி முடிவடைகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை 13 அலுவல் நாட்கள் கடும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் நாளைய மறுதினம் முக்கியமான விவாதங்கள் நடைபெற உள்ளதால் அனைத்து எம்.பி-க்களும் தவறாமல் அவைக்கு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

குறிப்பாக இந்திய அரசியலமைப்பு தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்திய அரசியலமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தனர். எனவே, நாளை மற்றும் நாளை மறுதினம் இந்திய அரசியலமைப்பு குறித்தான விவாதங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய அரசிலமைப்பு குறித்த பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளும் அவரவர் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளன.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

MUST READ