Homeசெய்திகள்சினிமாசிக்கிடு வைப்....ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த 'கூலி' படக்குழு!

சிக்கிடு வைப்….ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த ‘கூலி’ படக்குழு!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.சிக்கிடு வைப்....ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த 'கூலி' படக்குழு! ரஜினிகாந்தின் 171-வது படமான இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர் ,உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அடுத்தது சந்தீப் கிஷன், வருண் போன்ற நடிகர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படத்திலிருந்து வெளியாக ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்ட ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் 174 வது பிறந்த நாளான இன்று (டிசம்பர் 12) அவரது பிறந்தநாளை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையிலும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் கூலி படத்தில் இருந்து சிக்கிடு என்ற பாடலில் உள்ள சில காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் ரஜினி மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ