HomeBreaking Newsஆவடியில் 19 செ.மீ மழை !

ஆவடியில் 19 செ.மீ மழை !

-

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை !இந்த நிலையில்  ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை !

ஆவடியில் மழை காலம் என்றால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கிவிடுகிறது. மழையினால் ஏற்படும் நீர் சாலைகளில் தேங்கி, மேற்படி செல்ல இயலாமல் அப்படியே வெள்ளம் போல காட்சிகள் வருடம்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஆவடி மாநகராட்சியின் ஒவ்வொரு பகுதியும் கடுமையான அளவு பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்நிலை காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காலை முதலே ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.

அந்த வகையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணனூர் ஜோதி நகர் இரண்டாவது பிரதான சாலை,சாமந்தி தெரு,தாமரை தெரு, கோதாவரி தெரு, சிந்து தெரு என 500க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி முழங்கால் அளவு மழை நீர் தேங்கியுள்ளது.இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள், முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வயதானவர்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வீட்டில் உள்ளேயே முடங்கி உள்ள சூழல் உள்ளது.ஜோதி நகர் பகுதியில் பெரும்பாலான தெருக்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பால்,காய்கறி,அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே வெளியில் வந்து செல்கின்றனர். குடியிருப்பு வாசிகள் சிலர் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், மிதவைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சூழல் உள்ளது.அதில் ஒரு இளைஞர் வெளியே வந்து செல்ல தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட மிதவையை உபயோகித்து பயணித்து வருகின்றார்.

தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன மழை பெய்யும் பட்சத்தில் ஜோதி நகர் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக மாறும் அபாயம் உள்ளது.உடனடியாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ