செந்தில் மற்றும் யோகி பாபு ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். இந்தப் படத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தின் இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் சங்கர் தயாள் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பை பார்க்கும் போது இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready interesting glimpse from #KuzhanthaigalMunnetraKazhagam Teaser from December 13th ( Tomorrow )#KMKMovie #Senthil @iYogiBabu @shankardayaln @Meenakshia96013 @Arunkumars414431 @ARichardkevin @subbu6panchu @Lizzieantony @iamakalya @nannanpk @kailashsatana… pic.twitter.com/i4fgb3Srds
— Team AIM (@teamaimpr) December 12, 2024
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) இந்த படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.