சியான் 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவர் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலார் சுரங்கத்தில் தங்கம் கண்டறிவது குறித்த கதைக்களத்தில் இந்த படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது நடிகர் விக்ரம், அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் பாகம் 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் நெருங்கி இருக்கும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி இந்த படத்திற்கு சியான் 63 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
Extremely happy to announce our Production No.3 with @chiyaan sir for #Chiyaan63 ! Thank you for letting us to be a part of your incredible journey sir!
It’s a pleasure to work with @madonneashwin for the second time! Looking forward to have yet another memorable experience!… pic.twitter.com/AUcq8VyWRb
— Shanthi Talkies (@ShanthiTalkies) December 13, 2024
இந்த படத்தை மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.