அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற மீது நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம் பெற்று வந்துள்ளோம், ஆனால் இந்த வழக்கில் வாதம் செய்ய வேண்டும் என கோரிக்கை.
அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கில், ஜாமின் பெற்றவுடன் அமைச்சராக பதவி ஏற்றது ஏன் ? என்பது தொடர்பாக இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறினர், அதனால் தான் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.
ஆனால் தற்போது வாதம் செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டை மாற்றி கூறுகிறீர்கள் , எனவே அதனை ஏற்க முடியாது.
செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்டவர் விளக்கம் அளிக்கிறோம், ஆனால் தற்போது வாதம் செய்யக்கூடாது என்பது ஏற்கதக்கதல்ல.
அதற்கு கூடுதலாக இந்த விசயத்தில் எதுவும் கூற விரும்பவில்லை வழக்கை புதன்கிழமை ஒத்தி வைக்கிறோம் நீதிபதி கூறினார்.
அமலக்கத்துறையானது தங்கள் தரப்பில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்தை பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கிறோம். எனவே வழக்கு விசாரணை நீதிபதிகள் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.