உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தனது மரண விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதுல் சுபாஷ் (34) விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறிய நிலையில் பெங்களூர் போலீசார் அவரது மனைவி நிகிதா சிங்காரியா உள்ளிட்ட 4 குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அதுல் சுபாஷ் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் பெங்களூரு போலீசார் இரண்டு தனி படைகளை அமைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா வீட்டிற்கு பெங்களூர் போலீசார் சென்றபோது அங்கு வீடு பூட்டி இருந்த காரணத்தினால் மூன்று நாட்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை அவரது வீட்டு கதவில் ஒட்டிவிட்டு திரும்பினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நபர்களை தீவிரமாக தேடி வருவதாக பெங்களூர் காவல் துறை ஆணையர் பி.தயானந்த் தெரிவித்துள்ளார்.