Homeசெய்திகள்அரசியல்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்

-

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது. மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் ரூ.25,000 கட்டணம் செலுத்தி விருப்பமனு பெறலாம். நாளை மறுநாள் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 21 ஆம் தேதியே கடைசி நாளாகும்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடுவார் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

MUST READ