Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

-

- Advertisement -

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றம் செய்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையை கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2 ( குரூப் 2, 2ஏ  தேர்வுகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 ( குரூப் 4  தேர்வுகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தை tnpsc.gov.in/tamil/syllabus.html என்ற தேர்வாணை இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ