Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குளிர் காலத்தில் சூடான நீரை அதிகம் குடிக்காதீங்க!

குளிர் காலத்தில் சூடான நீரை அதிகம் குடிக்காதீங்க!

-

பொதுவாகவே நீரை கொதிக்க வைத்து பருகுவது மிகவும் நல்லது. ஏனென்றால் நீர் கொதிக்கும் போது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் அழிந்துவிடும்.குளிர் காலத்தில் சூடான நீரை அதிகம் குடிக்காதீங்க! ஆனால் அப்படி சூடான நீரை பருகினால் அதனை நன்கு ஆறவைத்து பருக வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அதாவது வெயில் காலத்தை போல் குளிர்காலத்திலும் நமக்கு நீர் சத்து தேவை. ஆனால் குளிர்காலத்தில் நீரை குடிக்கும்போது அது குளிர்ந்த தன்மையுடன் இருப்பதால் அதிக அளவில் நீரை எடுத்துக் கொள்ள தயங்குகிறோம். குளிர் காலத்தில் சூடான நீரை அதிகம் குடிக்காதீங்க!எனவேதான் நீரை சூடாக்கி வெதுவெதுப்பான நீராக பருக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி வெதுவெதுப்பான நீரை பருகும் போது குளிர்காலத்திலும் அதிகமான அளவில் நீரை எடுத்துக் கொள்ள முடியும்.

காலை வெறும் வயிற்றில் சூடான நீரை எடுத்துக் கொள்ளும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். அதுமட்டுமில்லாமல் சூடான நீரை குடிப்பதனால் உடல் எடையை குறைக்க முடியும். அதேசமயம் எவ்வளவு கடினமாக உணவாக இருந்தாலும் அதை எளிதில் ஜீரணமடைய செய்யும். இவ்வாறு சூடான நீரை பருவதால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் குளிர்காலத்திலும் கூட வெதுவெதுப்பான நீரை அதிகம் எடுத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர் காலத்தில் சூடான நீரை அதிகம் குடிக்காதீங்க!அதாவது அதிக அளவில் சூடான நீரை பருகும் போது தொண்டையில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் வயிற்றில் வெப்பநிலை அதிகரிக்கும் காரணத்தால் செரிமான பிரச்சனையும் ஏற்படக்கூடும். மேலும் சிறுநீரகம் குளிர் நீரை மட்டுமே வடிகட்டும் என்பதனால் சூடான நீரினால் நமக்கு சிறுநீரகப் பிரச்சனை உண்டாக அதிக வாய்ப்புள்ளது.

MUST READ