Homeசெய்திகள்சென்னைதமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

-

காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்இன்று காலை அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பின்னர் அவரது சொந்த ஊரான ஈரோட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ