Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

-

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொடங்கிவைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆண்டுக்கு மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு வருகை தந்திருந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தவறானது. பள்ளிகள் செயல்படாத கொரோனா காலத்தில் அன்றைக்கு இருந்த அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு 75% வருகை பதிவு உள்ள மாணவர்களே பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள் என்ற விதியே நடைமுறையில் உள்ளது.

தேர்வு எழுத மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஓரிரு தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அடுத்தடுத்து தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரவிவரும் காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் 5 பேர் கொண்ட குழுவினர் முதல்வரிடம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடரும்” எனக் கூறினார்.

MUST READ