Homeசெய்திகள்அரசியல்‘அரணாக இருப்பதே கமலாலய வாட்ச்மேன் தான் மேடம்...’ தமிழிசைக்கு பதிலடி

‘அரணாக இருப்பதே கமலாலய வாட்ச்மேன் தான் மேடம்…’ தமிழிசைக்கு பதிலடி

-

தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பை அளிக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை விமர்சித்து  இருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், தெலங்கானா, சத்யா திரையரங்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது கவலை அளிக்கக் கூடியது. அதேநேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. ஓரிடத்தில் தேவைக்கு அதிகமான கூட்டம் சேர தொடங்கிய உடனேயே காவல்துறை கண்காணிப்பையும், கட்டுப்பாட்டையும் துரிதப்படுத்த வேண்டும்.

அசம்பாவிதம் நடக்கும் வரை பார்த்துவிட்டு பின்பு கூட்டம் கூடியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன் உதாரணம். தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதையாக, அல்லு அர்ஜூனின் கைது அமைந்திருக்கிறது. சென்னையிலும் வானூர்தி சாகசத்தின்போது கூட்டம் கூட தொடங்கிய உடனேயே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும்.

காவல்துறையின் பாதுகாப்பு தோல்வியினால் 5 உயிர்கள் பறிபோயின. தெலங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும், தமிழக ஆட்சியாளர்களைதானே தெலங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பைத் தான் அளிக்கின்றன’’என அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்து வரும் நெட்டிசன்கள், ‘‘படத்திற்க்கு கூட்டம் கூடும் அது யாருக்குதான் தெரியாது. அந்த படத்தின் நடிகர் திடீரென்று வந்தது தான் அந்த இறப்பிற்கு காரணம். இறந்த அந்த பெண்மணியின் குழந்தை இன்னும் கோமாவில் இருந்து வெளியே வரவில்லை.விவாதப் பொருளான அல்லு அர்ஜுன் கைது விவகாரம்..... அரசியல் பழிவாங்கும் நோக்கமா?

அதை பற்றி ஒரு தாயாக ஏதவாது ஒரு வார்த்தை பேசனீர்களா?
அந்த குழந்தையின் எதிர்காலம்? முன் அறிவிப்பு இல்லாமல் போவது தவறு இல்லை. போலீஸ் தான் சூப்பர் ஹீரோ மாதிரி எல்லா இடத்திலும் இருக்கணும்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மற்றொருவர், ‘‘திமுக ஆட்சியில் youtuber Irfan மேலேயே கைகை வைக்கவில்லை. இதில் கூட்ட நெரிசல் மரணங்களுக்கு நீதி கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அரணாக இருப்பதே கமலாலய வாட்ச்மேன் தான் மேடம். சாகசம் நடத்தியது தமிழக அரசா? மத்திய அரசின் விமான படையா? கரெக்டா யோசித்து பதிவிடவும்’’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

MUST READ