Homeசெய்திகள்அரசியல்பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள்- ஓபிஎஸ்

பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள்- ஓபிஎஸ்

-

- Advertisement -

பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள்- ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடித்துவிடலாம் என தேர்தலை அறிவித்துள்ளனர். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக உறுப்பினர் படிவம் அளிக்க வேண்டும். அடையாள அட்டை வழங்கவேண்டும். இதை எல்லாம் முடித்த பிறகுதான் அதிமுகவில் உட்சபட்ச பதவிக்கு தேர்தல் நடைபெறவேண்டும். எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள். அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

திருச்சியில் ஏப்ரல் 2வது வாரத்தில் மாநாடு நடத்தப்படும். ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகத்தை தோல்வி பெற செய்தவர் எடப்பாடி பழனிசாமி, அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. தொண்டர்கள் கலங்க வேண்டாம்” எனக் கூறினார்.

 

MUST READ