Homeசெய்திகள்சினிமாதிரிஷாவை தொடர்ந்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த பிரபலங்கள்.... அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

திரிஷாவை தொடர்ந்து ‘சூர்யா 45’ படத்தில் இணைந்த பிரபலங்கள்…. அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

-

சூர்யா 45 படத்தில் திரிஷாவைத் தொடர்ந்து இன்னும் 4 பிரபலங்கள் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.திரிஷாவை தொடர்ந்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த பிரபலங்கள்.... அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

சூர்யா 45 திரைப்படத்தை தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யாவின் 45 வது படம் என்பதால் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திரிஷாவை தொடர்ந்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த பிரபலங்கள்.... அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது ஃபேண்டஸி கதை களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவருடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் எனவும் அறிவிக்கப்பட்டது. திரிஷாவை தொடர்ந்து 'சூர்யா 45' படத்தில் இணைந்த பிரபலங்கள்.... அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!இந்நிலையில் இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு மற்றும் நடிகை ஷிவதா ஆகியோர் சூர்யா 45 படத்தில் இணைந்திருப்பதை படக்குழு அடுத்தடுத்து புதிய போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ