நடிகர் அஜித், விடாமுயற்சி படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறார்.
அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 ஆவது படமான இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜார்பைஜான் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. அங்கு பாடல் காட்சி ஒன்றும் பேட்ச் ஒர்க் பணிகளும் நடைபெற இருக்கிறதாம். இதற்கிடையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் அஜித். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக விமானத்தில் பாங்காக் செல்கிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.