நடிகை நயன்தாரா சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம் என பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள மண்ணாங்கட்டி, தி டெஸ்ட் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் தி ராஜாசாப் திரைப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாட இருக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நயன்தாரா ஏற்கனவே சிவகாசி, சிவாஜி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் இடம்பெற்ற சிறப்பு பாடல்களுக்கு நடனமாடியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபாஸ் படத்தில் நடனமாட உள்ளார் என்ற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் திரைத்துறையில் ஸ்டார் நடிகைகளாக வலம் வரும் சமந்தா ‘புஷ்பா’ படத்திலும், திரிஷா ‘கோட்’ படத்திலும் நடனமாடி இருந்த பாடல் இன்றுவரையிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் நயன்தாரா நடனமாட உள்ள பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.