Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு...

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

-

நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்  ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி45 % மேல் தமிழ்நாட்டில் தான் நூற்பாலைகள் உள்ளன. 15 ஆண்டிற்கு மேலாக உள்ள கருவிகளை நவீனப்படுத்த வரலாறு காணாத திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 15 ஆண்டுக்கு மேலுள்ள நூற்பாலைகளை மேம்படுத்த வங்கியில் பெறும் வட்டியில் 6% வட்டியினை நூற்பாலை நிறுவனங்களுக்காக அரசே ஏற்றுக்கொண்டு வழங்கவுள்ளது தமிழ்நாடு அரசு  இந்திய அளவில் இது போன்றதொரு திட்டம் வேறெங்கும் இல்லை. இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக தமிழகத்தில் 54 சதவீதம் உற்பத்தி பஞ்சு பின்னலாடைகள் விசைத்தறிகள் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்கிறோம். நூற்பாலைகளை நவீனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம் அதனை ஏற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு நவீனப்படுத்துவதால் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாடு விளங்கும். தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் துறையின் அமைச்சர் அவர்களுக்கும் நன்றி ஜவுளித்தொழிலுக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் புத்தாக்கம் பெறும் என தெரிவித்தனர்.

MUST READ