Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைந்த கங்குவா படக் கூட்டணி.... 'சூர்யா 45' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

மீண்டும் இணைந்த கங்குவா படக் கூட்டணி…. ‘சூர்யா 45’ படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

-

சூர்யா 45 படத்திற்காக கங்குவா படக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.மீண்டும் இணைந்த கங்குவா படக் கூட்டணி.... 'சூர்யா 45' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இணைந்த கங்குவா படக் கூட்டணி.... 'சூர்யா 45' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் திரிஷா ஆகியோரின் கூட்டணி இந்த படத்தில் இணைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். மேலும் இந்த படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு, ஷிவதா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டும் இணைந்த கங்குவா படக் கூட்டணி.... 'சூர்யா 45' படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!அதைத் தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யா 45 படத்தில், நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, நட்டி நட்ராஜ், யோகி பாபு ஆகியோரின் கூட்டணி ஏற்கனவே கங்குவா திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ