விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சண்டைகள், கலவரங்கள் என சுவாரசியமாக சென்றாலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தான் டாஸ்க்கில் பங்கேற்றபோது ஜெஃப்ரிக்கும் ராணவுக்கும் இடையே போட்டி இருந்த நிலையில் அது கடுமையான மோதலாக மாறியது. இதனால் ராணவ் கீழே விழுந்து அவரது தோள்பட்டையில் அடிபட்டது. அந்த சமயத்தில் அவர் தனக்கு வலிக்கிறது என கத்த , ஜெஃப்ரி மற்றும் சௌந்தர்யா ஆகியோர் அவர் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். அதைத்தொடர்ந்து அருண் மற்றும் விஷால் ஆகிய இருவரும் உடனடியாக ராணவ்வை தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர். அந்த சமயத்திலும் மற்ற போட்டியாளர்கள் ராணவ் நடிக்கிறான் என்று கூறி வருகிறார்கள். அந்த சமயத்தில் தான் பிக் பாஸ், ராணவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று அறிவிக்கிறார். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். இது தொடர்பான புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.