சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையெடுத்து தொகுதி காலியானதாக அறிவித்ததை அடுத்து . அந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையெடுத்து தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்தியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார் . இதை எடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தொடர்பான தகவல்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்