Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தல் த.வெ.க-வுக்கு சிங்கப்பாதையா? பூப்பாதையா..? இப்போ பார்த்துடலாம் சார் உங்க பவர..!

ஈரோடு இடைத்தேர்தல் த.வெ.க-வுக்கு சிங்கப்பாதையா? பூப்பாதையா..? இப்போ பார்த்துடலாம் சார் உங்க பவர..!

-

கடந்த முறை ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘பட்டி ஃபார்முலா’ தி.மு.க.விற்கு பெரிதும் கைகொடுத்தது. இந்த முறை அந்தளவிற்கு களத்தில் இறங்கி செந்தில் பாலாஜி வேலை பார்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் – எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. காரணம், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தலை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸே போட்டியிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த இடைத்தேர்தல், தி.மு.க., ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும் என்பதால், இத்தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி உள்ளது.அதிமுக ஆட்சியில் ஆசிரியர், அரசு ஊழியர்களை எடப்பாடி பழனிச்சாமி கேவளப்படுத்தினார். தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: திமுக கண்டனம்

இதற்காக, இப்போதே அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களை, ஈரோடு நோக்கி தி.மு.க., தலைமை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆட்சி, அதிகார, பண பலத்தால் ஆளும்கட்சியே வெல்லும் என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் புறக்கணிக்கலாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க., தலைமை வந்திருப்பதாக கூறப்பட்டாலும், தொடர்ச்சியாக தேர்தலை புறக்கணிப்பது சரியாக இருக்காது என எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்களாம்.

அதேநேரம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டது போல, பா.ஜ.க, கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி கொங்கு பகுதியில் வருவதால், அங்கே பலமாக இருக்கும் பா.ஜ.க, தரப்பில் போட்டியிட விரும்புகின்றனர்.

பா.ஜ.க,வும், தி.மு.க.,வும் தான் தன் கட்சிக்கு சித்தாந்த ரீதியில் எதிரானவை என, கட்சி மாநாட்டின் வாயிலாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., மற்றும் பா.ஜ.க, கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நடிகர் விஜயை, கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, அத்தொகுதியில் த.வெ.க., சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் நடிகர் விஜய், கட்சியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்கச் சொல்லி இருக்கிறாராம். எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்றத் தேர்தலுக்கு நடிகர் விஜய் முன்னோட்டம் பார்க்கலாம் என்கிறார்கள் த.வெ.க.வினர்!

MUST READ