Homeசெய்திகள்தமிழ்நாடுபரபல ஆன்லைன் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பரபல ஆன்லைன் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

-

ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் மொபைல் போன் வாங்க பணம் செலுத்தியவருக்கு தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை அனுப்பி வைத்த நிறுவனமும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல ஆன்லைன் நிறுவனம் மீது மோசடி வழக்கு - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனையாளர் . வாடிக்கையாளருக்கு ரூ.44,519/- வழங்க உத்தரவு

கடந்த 2021 டிசம்பர் முதல் நாளில் நாமக்கல், ஆர்பி புதூரில் வசித்து வரும் கே. சரவணகுமார் (36) மொபைல் போன் ஒன்றை வாங்குவதற்காக பிரபலமான ஆன்லைன் விற்பனை இணையதளத்தை (Amazon seller Service Private Limited)  பார்வையிட்டுள்ளார்.  இணையதளத்தில் சரவணகுமார் தேர்வு செய்த மொபைல் போன் விற்பனையாளராக கோயம்புத்தூரில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் (Sarshita Aashiyana(p) Ltd.,) காட்டப்பட்டிருந்தது. தேர்வு செய்த மொபைல் போனை வாங்க ஆன்லைன் விற்பனை இணையதளத்தின் மூலமாக கிரெடிட் கார்டில் அவர் ரூ.24,519/-ஐ  செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்தப்பட்ட மறுநாளே கூரியர் மூலம் சரவணகுமாரின் முகவரிக்கு பார்சல் வந்துள்ளது. அதனை அவர் பிரித்துப் பார்த்தபோது பார்சலுக்குள் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவிய சிறிய பாட்டில் ஒன்று இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இது குறித்து ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனத்தில் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்திற்கான மொபைல் போன் வழங்கப்படவில்லை. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக புகார் தெரிவித்த வாடிக்கையாளரின் கணக்கை ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனம் ரத்து செய்வது விட்டது.

இதனால் வேறு வழியின்றி ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனத்தின் மீதும் இணையதளத்தில் விற்பனையாளராக காட்டப்பட்ட நிறுவனத்தின் மீதும் சரவணகுமார் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் (17-12-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்.

பிரபல ஆன்லைன் நிறுவனம் மீது மோசடி வழக்கு - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஆன்லைன் விற்பனை இணையதள நிறுவனமும் அதன் விற்பனையாளரும் சேவை குறைபாடு புரிந்துள்ளதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  வாடிக்கையாளர் செலுத்திய ரூ.24,519/- மற்றும் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 20,000/- ஆகியவற்றை நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க ஆன்லைன் இணையதள விற்பனை நிறுவனத்திற்கும் அதன் விற்பனையாளருக்கும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்

MUST READ