Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'..... நாளை வெளியாகும் புதிய பாடல்!

ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’….. நாளை வெளியாகும் புதிய பாடல்!

-

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து புதிய பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை..... நாளை வெளியாகும் புதிய பாடல்!

ஜெயம் ரவி கடைசியாக பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்தது சிவகார்த்திகேயனின் SK 25 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். மேலும் ஜீனி, JR 34 போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் ஜெயம் ரவி, காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து லால், வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க கிருத்திகா உதயநிதி இந்த படத்தை இயக்குகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை..... நாளை வெளியாகும் புதிய பாடல்! இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த போஸ்டர்களும், என்னை இழுக்குதடி எனும் முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நாளை (டிசம்பர் 18) மாலை 5 மணி அளவில் இந்த படத்தில் இருந்து லாவண்டர் நேரமே எனும் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ