Homeசெய்திகள்சினிமாநடிகர் சிம்புவிடம் கதை சொன்ன 'பார்க்கிங்' பட இயக்குனர்!

நடிகர் சிம்புவிடம் கதை சொன்ன ‘பார்க்கிங்’ பட இயக்குனர்!

-

பார்க்கிங் பட இயக்குனர் நடிகர் சிம்புவிடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிடம் கதை சொன்ன 'பார்க்கிங்' பட இயக்குனர்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே அடுத்தது ராம்குமார் பாலகிருஷ்ணன் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி ராம்குமார் பாலகிருஷ்ணன் ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருப்பதாகவும் அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போனதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் சிவகார்த்திகேயன் தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருக்கும் நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இன்னும் சில வருடங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது.நடிகர் சிம்புவிடம் கதை சொன்ன 'பார்க்கிங்' பட இயக்குனர்! அதே சமயம் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் விக்ரமிடமும் கதை சொல்லி இருப்பதாக தகவல் கசிந்து இருந்தன. இந்நிலையில் நடிகர் சிம்புவிடமும் ஒரு வரி கதையை சொல்லி இருக்கிறாராம் ராம்குமார் பாலகிருஷ்ணன். எனவே நடிகர் சிம்பு, இந்த ஒரு வரி கதை தனக்கு பிடித்திருப்பதாகவும் விரைவில் முழு கதையை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி இருக்கிறாராம் சிம்பு. எனவே எதிர்காலத்தில் இவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ