Homeசெய்திகள்அரசியல்“ஒரே நாடு ஒரே தேர்தல் ”மசோதா – நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்

“ஒரே நாடு ஒரே தேர்தல் ”மசோதா – நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஒப்புதல்

-

ஒரே நாடு ஒரே தேர்தல்”தொடர்பான சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் அறிவுறுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்!"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா" - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப ஒப்புதல்

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 16வது நாளான இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நண்பகல் வேளையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் மீது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மக்களவை குழு தலைவர்கள் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்புடைய சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய போது பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என பரிந்துரைத்ததாகவும், அனைத்து தரப்பு கருத்துகளும் சட்ட திருத்த மசோதாவிற்கு தேவை எனவும் பிரதமர் கூறியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்தே, நாடாளுமன்றத்தின் மக்களவையில் மின்னணு முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சட்ட திருத்த மசோதா பரிந்துரைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

MUST READ