கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது சூர்யாவின் கங்குவா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக தோன்றியிருந்தார். மேலும் இவர் வா வாத்தியார், சர்தார் 2, கைதி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் நடிகர் கார்த்தி, பிரபல இயக்குனரும் நடிகருமான தமிழ் இயக்கத்தில் தனது 29ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். அதன்படி கார்த்தி 29 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே இந்த படம் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தி 29 படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.