Homeசெய்திகள்க்ரைம்மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

-

மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2200 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.

மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைதுஇதில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 64) என்பவரை பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர்.

இவரிடமிருந்து ரூபாய் 3000 ரொக்கப்பணம், 2200 அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள், ஒரு இருசக்கர வாகனம், இரண்டு ஆன்ட்ராய்டு மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் ராமலிங்கம் மீது வழக்கு பதிந்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.‌

MUST READ