Homeசெய்திகள்தமிழ்நாடுதவறான கருத்தை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி மீது - அவதூறு புகாா்

தவறான கருத்தை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி மீது – அவதூறு புகாா்

-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே  ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரியமாக குடிசைத் தொழிலாக 3 தலைமுறையாக ஆத்தங்குடியில் செய்து வருகின்றனர்.

தவறான கருத்துக்களை பரப்பிய தனியார் தொலைக்காட்சி மீது அவதூறு புகார்

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி (பிக் பாஸ்) நிகழ்ச்சியில் .தங்கள் பாரம்பரிய தொழிலை அவதூறு பரப்பியும் தவறான தகவலை கூறி அவமானப்படுத்தியதாக  ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடியில்  ஆத்தங்குடி டைல்ஸ் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய முறையில், இங்குள்ள வாரி மண் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் ஆத்தங்குடி டைல்ஸ் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி (பிக்பாஸ்) ஒன்றில்  ஆத்தங்குடி டைல்ஸ் பொதுவாக கையால் தயாரிக்கப்படுகிறது எனவே சீரற்ற முறையில் இருப்பதாகவும் கலர் மங்கும், அதிக  பராமரிப்பு தேவைபடும், ஆத்தங்குடி டைல்ஸ் விலையை விட தங்கள நிறுவன (KAG) செராமிக் டைல்ஸ் விலை குறைவானது என ஆத்தங்குடி டைல்ஸ் விட சிறந்தது என தவறான கருத்தை விளம்பரத்திற்காக பேசியது ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது .

இதனால் ஆத்திரமடைந்த ஆத்தங்குடி கிராம டைல்ஸ் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

தவறான கருத்தை பதிவிட்டவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பல ஆண்டுகளாக தங்கள் பாரம்பரிய டைல்ஸ் தொழிலுக்கு புவிசார் குறியீடு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… விரைந்து வரும் தேனி போலீஸ்..!

MUST READ