பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் ஜப்பானில் வெளியாக இருக்கிறது.
பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாக் அஸ்வின் படத்தினை தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ், தி ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் பிரபாஸின் கல்கி 2898 AD திரைப்படம் 2025 ஜனவரி 3ஆம் தேதி ஜப்பானில் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பிரபாஸ் மற்றும் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோர் ஜப்பானுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது பிரபாஸுக்கு படபிடிப்பின் போது காயம் ஏற்பட்டிருப்பதால் அவருடைய ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ஜப்பானில் உள்ள பிரபாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் நடிகர் பிரபாஸ் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.