திருவள்ளூரில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க வேண்டி எம்.பி சசிகாந்த் செந்தில் ரயில்வே துறைக்கு கடிதம்.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஒன்றிய இரயில்வே இணை அமைச்சர் சோமன்னாவை டெல்லியில் சந்தித்து திருவள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரிக்கை கடிதம் அளித்தார்.
அதில் சென்னையின் ரயில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க வேண்டும் என்றும். கும்மிடிப்பூண்டி-சென்னை மத்திய புறநகர்ப் பிரிவை மேம்படுத்தி, வேகமான லூப் லைன்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும்.
கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற அதிவேக விரைவு ரயில்களை திருவள்ளூரில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை அடங்கிய கடிதத்தை ரயில்வே இணை அமைச்சர் சோமன்னாவை சந்தித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வழங்கினார்.
அமெரிக்க ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது – ஏற்றுமதியாளர்கள் சங்கம் மகிழ்ச்சி