சோழவரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கூலி தொழிலாளி 80 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல். 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஆனந்த் (27). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். ஆனந்த் தினந்தோறும் மதுபோதையில் தகராறு செய்வதால் அவரது மனைவி சண்டையிட்டு கொண்டு தேவநேரி கிராமத்தில் உள்ள தமது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆனந்த் தமது மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்வதற்காக மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்ததால் போதை தெளிந்தவுடன் காலையில் வாருங்கள் என மாமியார் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆனந்த் மதுபோதையில் அங்குள்ள 80 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த ஆனந்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுபோதையில் இருந்த ஆனந்திடம் சுமார் 1 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியின் மீது ஏறினர். தொடர்ந்து மதுபோதையில் இருந்த ஆனந்த்தை கயிறு கட்டி பத்திரமாக தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே இறக்கி அவரது தாயுடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்ததால் விரக்தியடைந்த கூலி தொழிலாளி மது போதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ? அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்