தமிழ்நாடு சட்டபேரவை செயலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதத்தை இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுப்பி வைத்தாா்.
சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளது . ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள்அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து வந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.