Homeசெய்திகள்சினிமாஇன்று நடைபெறும் 'வணங்கான்' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சூர்யா!

இன்று நடைபெறும் ‘வணங்கான்’ ஆடியோ லான்ச்…. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சூர்யா!

-

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது.

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான்.இன்று நடைபெறும் 'வணங்கான்' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சூர்யா! இந்த படத்தினை பிரபல இயக்குனர் பாலா இயக்க வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் இந்தப் படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 18) சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது. அதேசமயம் இதே நாளில் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால கலைப்பயணத்தையும் கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.இன்று நடைபெறும் 'வணங்கான்' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சூர்யா!

அதாவது வணங்கான் திரைப்படமானது ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவிற்காக எழுதப்பட்டது. அதன்படி சூர்யாவின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் இந்த படம் உருவாகி வந்த நிலையில் இயக்குனர் பாலாவிற்கும், நடிகர் சூர்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். இந்நிலையில் நடிகர் சூர்யா, பாலாவின் 25 ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ