கபா டெஸ்ட் டிராவான பிறகு, ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கபா டெஸ்ட் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
பிறகு ரோஹித் சர்மாவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடந்த விஷயம்தான் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மையில், செய்தியாளர் சந்திப்பில் புஜாரா, ரஹானே மற்றும் அஷ்வின் ஆகியோர் கிரிக்கெட்டில் பொறுப்புகளில் இடம்பெறுவார்களளா? என்று ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, ‘‘ஏய் சகோதரரே, நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள்.’’ என ஒரு கணம் பதறி விட்டார். அஷ்வின், புஜாரா மற்றும் ரஹானே குறித்து ரோஹித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டவுடன், ‘ஏய் தம்பி, அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்டார். நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள். ரஹானே-புஜாரா இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர். நன்றாக விளையாடினால் அணிக்கு வரலாம்’ என ரோஹித் தெரிவித்தார்.
அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் வேறு ஏதேனும் ஆச்சரியம் நடக்குமா? என்று ரோஹித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘‘இல்லை. இப்போ ஒன்னும் இல்ல’’ எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை டீம் இந்தியா வெல்ல முடியாவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு வர முடியாவிட்டால், விராட் கோலி, ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் விடைபெறலாம் என்ற ஊகங்கள் உள்ளன. இருவரும் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். விராட் கோலியாவது பெர்த்தில் சதம் அடித்தார். ஆனால் ரோஹித் நீண்ட காலமாக மோசமான நிலையில் இருந்து வருகிறார். அடுத்து மெல்போர்ன், சிட்னியில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெர்த் டெஸ்ட் டிராவில் முடிந்தாலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும். அதன்பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் என்ன திருப்பம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா முதல் இடத்திலும் உள்ளன.