Homeசெய்திகள்சினிமாவாழ்ககையிலும் படத்திலும் துணை கிடையாது? - சிம்பு

வாழ்ககையிலும் படத்திலும் துணை கிடையாது? – சிம்பு

-

- Advertisement -

வாழ்ககையிலும் படத்திலும் துணை கிடையாது? – என்று பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு  பேசினார்.

நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் நடிகர் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சிம்புவின் பெற்றோர், நடிகர் ஆரி, இயக்குநர் சுதா கொங்கரா, ஆகியோர் பங்கேற்றனர்.

இசை வெளியீட்டு விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான், படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடலை பாடி இசை கச்சேரியை தொடங்கினார். தந்தை ஏ.ஆர்.ரகுமான் இசையில், மகன் ஏ.ஆர்.அமீன் குரலில் உருவான ‘நினைவிருக்கா’ பாடலை விழா மேடையில் இருவரும் அரங்கேற்றினர்.

சினிமா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் லைட் மேன் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏ.ஆர் ரகுமான் முன்னெடுத்துள்ள “The Light Man Group’s” என்ற இணைய சேவையை நடிகர் சிம்பு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் 30 ஆண்டுகால இசை பயணத்திற்கு பத்து தல பட குழு வெள்ளி’யால் ஆன “வீணை”யை நினைவு பரிசாக வழங்கினர்.

நடிகர் சிலம்பரசன் மேடையில் பேசுகையில்,

தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வணக்கம். நான் இங்கு நிற்க காரணமான எனது ரத்தமான ரசிகர்களுக்கு வணக்கம். நான் இங்கு வரும்போது ஒரே ஒரு விசயம் தான் ஓடிக்கொண்டிருந்தது. நான் அழக்கூடாது என்று படத்தில் சிறிய எமோஷனல் சீன் வந்தாலும் அழுது விடுவேன். இங்கு ஏன் அழக்கூடாது என நினைத்தேன் என்றால் ரசிகர்களால் தான். சோகமான சீன்லாம் முடிந்தது. இனி சந்தோசமான சீனாக முடியும், என்றார் சிம்பு.

இந்த படம் ஆரம்பித்த போது ரொம்ப கீழிருந்தேன். சினிமாவை விட்டு போய் விடுவோம் என்று நினைத்து கொண்டிருந்தேன். மஃப்டி படம் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். அவர் நடித்ததை நம்மால் நடிக்க முடியாது. இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம் கவுதம் தான், என சிம்பு கூறினார்.

மேலும், பேசிய சிம்பு, “தட்டிவிட நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுக்க யாருமே கிடையாது, கவுதம் நடிகன் மட்டுமல்ல, நல்ல பையன், தங்கமான பையன்‌, ஹேட்ஸ் ஆஃப் கவுதம்” என்று புகழ்ந்தார். இந்த படம் எனக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ கவுதம்காக வெற்றியடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன், என்றார்.

இந்த படத்தில் நடிக்க குண்டாக இருக்க வேண்டும் என இயக்குநர் கோரிக்கை வைத்தார். இப்போதுதானே எடை குறைத்தேன். இனி எடை போட முடியாது என இயக்குநரிடம் கூறினேன் என கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

போட்டோஷூட்டுக்கு பின் அதை பார்த்து, 104 கிலோவை குறைத்த என்னால் இந்த படத்துக்காக எடையை குறைக்க முடியாதா என நினைத்துக் கொண்டு எடையை கூட்ட ஒப்புக்கொண்டேன்.

பத்து தல படத்திலும் துணை கிடையாது. என் வாழ்க்கையிலும் துணை கிடையாது. அது பிரச்சினை இல்லை என்றார் சிம்பு.

இந்த படத்துக்கு பின் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டி இருந்தது. அப்போது நடித்திருந்தால் ஒரு தலை தான் கிடைத்திருக்கும். ஆனால் இப்போது பத்து தல கிடைத்திருக்கிறது. எனது காட்பாதர் ரகுமான் சார் தான். அவரது பெயரை நான் கெடுத்துவிட மாட்டேன் என நம்புகிறேன். என் ஆன்மீக குருவாகவும் உள்ளார்.

என்னுடைய எந்த படத்தின் விழாவுக்கும் என் பெற்றோர்கள் வந்ததில்லை. இவ்விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எனது ரசிகர்கள் தான். முன்னாடி எல்லாம் ஒரு மாதிரி கத்தி பேசி இருக்கிறேன். அது எதனால் என்றால் கஷ்டத்தில் இருந்தேன். யாரும் தட்டிக் கொடுக்கவில்லை. அதை எப்படி வெளிக்காட்டிக் கொள்ள முடியும். அந்த நேரத்தில் அந்த மாதிரி தான் பேச முடியும். எனக்கென்று நானும் என் ரசிகர்களும் தான் இருக்கிறோம்.

38 கிலோ எடை குறைத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு அதை தொடர்ந்து இங்கு நிற்கிறேன் என்றால் பணிவாக தான் பேச முடியும். இனிமேல் பேச்சு இல்லை எல்லாம் செயல்தான். ஒரு முறை Transformation செய்தால் முடியாது. ஒவ்வொரு நாளும் Transformation முக்கியம், என்று கூறினார் சிம்பு.

இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளத்தில் எனக்காக சண்டையிட வேண்டாம். இனிமேல் என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்கள். வேற மாதிரி வந்திருக்கேன். இனிமேல் உங்களை தலைகுணிய விடவே மாட்டேன். தமிழ் மக்கள், தமிழ் சினிமா பெருமை படும் அளவுக்கு கண்டிப்பாக படம் எடுப்பேன்.

உங்களுக்குள்ளே உள்ள character ஐ யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள் என்று கூறினார். பின்னர், ரசிகர்களுக்காக ‘லூசு பெண்ணே’ பாடலை பாடி, நடனமாடி அனைவரையும் நடனம் ஆடி வைத்து அசத்தினார் சிம்பு. மார்ச் 30 உங்களோடு சேர்ந்து படம் பார்ப்பேன் என்று ரசிகர்களிடம் கூறினார்.

மேலும், விழா இறுதியில் பத்து தல படக்குழு சார்பாக 50 லட்ச ரூபாய் நிதியை நடிகர் சூர்யா நடத்தும் அகரம் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குகிறோம் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்தார்.

விழா மேடையில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில்,

பத்து தல படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் சிம்பு, அதன் பிறகு இயக்குனர் கிருஷ்ணா என்னுடைய ஆல்பத்தில் மிக முக்கியமான பாடல் ‘முன்பே வா’ பாடல். அந்த பாடல் சோகமா உள்ளது என இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் இல்லை இது கண்டிப்பா ஹிட் ஆகும் என கூறினார்.

மூன்றாவது காரணம் தயாரிப்பாளர் என்றார். இந்த நம்ம சத்தம் பாடல் சிம்பு பாட வேண்டியது அவர் வெளிநாடு சென்று விட்டதால் நான் பாடவேண்டியதாக ஆயிற்று என்றார்.

இதில் சினிமா துறையில் பணியாற்றும் லைட் மேன் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஏ.ஆர் ரகுமான் உருவாக்கியுள்ள “The Light Man Group’s” என்ற இணைய சேவையை நடிகர் சிம்பு தொடங்கி வைத்தார். டி.ராஜேந்திரன் அவர்கள் எனக்கு ஒரு inspiration என ரகுமான் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மேடையிலேயே சிம்பு மற்றும் ஏ. ஆர் ரகுமான் ரசிகர்களோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.

விழா மேடையில் டி.ராஜேந்தர் பேசுகையில்,

மைக்கில் இசையமைத்து மைக் டெஸ்ட் என கூறினார். இந்த நேரு உள்விளையாட்டு அரங்கத்திலே பத்து தல’ என்ற பிரம்மாண்ட படைப்பின் விழா மேடைக்கு கீழே அமர்வேன். உங்களை சந்திப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பி வரவில்லை. அமெரிக்கா சென்று விட்டு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகன். அவனுக்காக வராமல் வேறு யாருக்காக வருவேன்‌.

படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். அவரது ஸ்டைலில் ரைமிங்கில் பத்து தல படம் பற்றி டி.ராஜேந்தர் பேசினார்.

இயக்குநர் கிருஷ்ணா மேடையில் பேசுகையில்,

வேறொரு சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலை வந்தது. தயாரிப்பாளர் தரப்பில் நியாயமாக இருந்தது‌. குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏற்கனவே 2 படங்கள் கைவிடப்பட்டிருக்கு. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் பேசினேன்.

STR ஒரு இயக்குநரிடம் வரும் போது தன்னை முழுதாக ஒப்படைத்து விட்டு எந்த தொந்தரவும் செய்யாத நபர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை ரகுமான் சாரை பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். படக்குழுவுக்கு நன்றி.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மேடையில் பேசுகையில்,

என்னுடைய சினிமா வாரிசு கவுதம் கார்த்திக் தான். இதுவரை 4 படங்கள் அவரோடு பண்ணி இருக்கோம். இன்னும் 40 படங்கள் அவரை வைத்து பண்ணுவேன். இன்னும் ஓரிரண்டு வருடத்தில் முக்கியமான நடிகராக கவுதம் கார்த்திக் வருவார். படக்குழு அனைவருக்கும் நன்றி

நடிகர் கவுதம் கார்த்திக் மேடையில் பேசுகையில்,

அனைவருக்கும் வணக்கம். இவ்வளவு பெரிய மேடையில் நிற்க வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. கிருஷ்ணா சார் இந்த படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கும் மிகப்பெரிய நன்றி.

இந்த படத்தில் ஆக்ஷன் தான் அடித்தளம். STR வேற லெவல். முதலில் அவரை 2013-ல் லண்டனில் சந்தித்தேன்‌. அந்த தருணத்தை நான் மறக்கவே மாட்டேன். அவருடைய விரல் வரைக்கும் அனைத்தும் நடிக்கும்.

இந்த மாதிரி ஒரு கலைஞரை பார்த்ததே இல்லை‌. அவரைப்போல் ஆக வேண்டும் என ஆசையாக இருக்கிறது.

MUST READ