Homeசெய்திகள்சினிமாGVP100... சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

GVP100… சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். GVP100... சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது குட் பேட் அக்லி, வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் SK 25 திரைப்படம் தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாகும். இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்க சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த திரைத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

அந்த அறிக்கையில், “வெயில் படத்தின் மூலம் தான் தமிழ் திரை இசை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானன். இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் வசந்த பாலனுக்கும் தயாரிப்பாளர் சங்கருக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.GVP100... சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்! இதைத்தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, பிரபாஸ், சித்தார்த், கார்த்தி, ஆர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அருண் விஜய் என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இது போன்ற படங்களை எல்லாம் இயக்கிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இசை கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தது கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்க ஆவலுடன் காத்திருந்த நிலையில் தான் அமரன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைப்பது. அந்த படத்தின் பாடல்களையும் இசையையும் கேட்டு கமல் சார் பாராட்டியது எனக்கு மிகவும் உற்சாகத்தை தந்தது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடவராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். GVP100... சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!இதற்கு வாய்ப்பளித்த திரைத்துறையினருக்கும் என்னுடைய பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றி. 2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப்பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்தில் இசையமைக்கும் நல்ல வாய்ப்பை பெற்றுள்ளேன். சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெள்ள காரணமாக இருந்த இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பதன் மூலம் 100வது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளேன். தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும், நடிப்பதிலும், பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டு இருக்கிறேன். இதற்கு ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ