ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீப்ளி – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணிகள் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பாலம் திறப்பது குறித்த தேதி வெளியாகும் என மதுரை மாவட்ட ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் எல்.என்.ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.