Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறனின் 'விடுதலை 2' பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

-

விடுதலை 2 படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்வெற்றிமாறனின் 'விடுதலை 2' பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று (டிசம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அதே சமயம் தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “விடுதலை 2 படத்தின் முதல் 30 நிமிடங்கள் அருமையாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு, வசனங்கள் ஆகியவை பிரமாதம். புரட்சி அதிகம். ஆனால் சுவாரஸ்யமாக செல்கிறது”என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “வெற்றிமாறன் ஒரு ஃபிலிம் மேக்கர். அவர் வலுவான காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்தாமல், காதல் காட்சிகளையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “இது வெற்றிமாறனின் கல்ட் கிளாசிக் படம். விஜய் சேதுபதியின் வேறொரு பரிமாணத்தில் விடுதலை 2 படம் இருக்கிறது. என்ன ஒரு நடிகர் அவர். அடுத்த தேசிய விருது இந்த படத்திற்கு கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ